சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை தாக்கும் பூச்சிகளை கண்டுபிடிக்கும் கருவி...

First Published Jun 30, 2018, 1:51 PM IST
Highlights
Tool to detect pests that attack stored grains ...


பூச்சிகளை கண்டறியும் கருவி

சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களைத் தாக்கும் பூச்சிகளை கண்டுபிடிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன.  அவை, ஒரு முக்கிய குழாய், பூச்சிகளை பிடிக்கும் குழாய் மற்றும் அதனுடன் பொறுத்தி நீக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கூம்பு போன்ற அமைப்பு. முக்கிய குழாயில் 2மிமீ விட்டத்திற்கு சம இடைவெளியில் துளைகள் இருக்கும். 

கருவி செயல்பாட்டின் அடிப்படை : 

பூச்சிகள் காற்றை மிகவும் விரும்பும். எங்கு காற்று வருகிறதோ அப்பகுதியை நோக்கி அவை செல்லும். பூச்சிகளின் இந்த பழக்கம் இக்கருவி செயல்படுவதற்கு முக்கிய கருவாக இருக்கிறது.

வேலை செய்யும்முறை: 

இக்கருவியினை, செங்குத்தாக, இதன் வெள்ளை கூம்பு போன்ற பகுதி கீழே இருக்குமாறு, கோதுமை, அரிசி போன்ற சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களில் வைக்கவேண்டும். இதன் மேலுள்ள சிவப்பு நிற மூடி தானியங்களின் மேல்மட்டத்திற்கு இணையாக இருக்குமாறு வைக்க வேண்டும். 

இவ்வாறு வைத்திருக்கும்போது தானியங்களிலுள்ள பூச்சிகள் காற்று வரும் பகுதியான முக்கிய குழாயிலுள்ள துளைகளுள் செல்லுகின்றன. இவ்வாறு செல்லும் போது அவை கூம்பு வடிவிலான அடிப்பகுதியில் விழுந்துவிடும். 

இவ்வாறு விழுந்தவுடன் பூச்சிகளால் வெளியே செல்லமுடியாது, பிடிக்கப்பட்டுவிடும். ஒரு வாரத்திற்கு ஒருமுறை இக்கருவியினை தானியத்திலிருந்து எடுத்து அதன் அடிப்பகுதியான கூம்பில் சேகரிக்கப்பட்டிருக்கும் பூச்சிகளை அழித்துவிட வேண்டும்.

இக்கருவியின் சிறப்பம்சம் : 

இரசாயனங்கள் உபயோகிக்காத, பக்கவிளைவுகள் ஏதுமில்லாத, பராமரிப்பு செலவு இல்லாத பூச்சிகளை அழிக்கும் திறன் கொண்டது இக்கருவி.

இக்கருவியின் பூச்சிகளை பிடிக்கும் திறன் : 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சிகளை கண்டறியும் கருவிகள் உணவு தானியங்கள், மற்றும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்களில் ரைசோபெர்த்தா டொமைனிக்கா (Rhyzopertha dominica.),ஸைட்டோபைலஸ் கிரைசே மற்றும் டிரைபோலியம் கேசடேனியம் (Sitophilus cryzae (L.) and Tribolium castaneum (Herbst)) போன்ற பூச்சிகளை கண்டுபிடிக்கவும் மற்றும் அவற்றை பிடிக்கவும் மிகத்திறன் வாய்ந்த கருவிகளாகும். 

இக்கருவிகளின் பூச்சிகளை கண்டுபிடிக்கும் விகிதம், வழக்கமான மாதிரி முறைகளுடன் ஒப்பிடும் போது, 2 :1 முதல் 31 :1 வரை இருக்கிறது. மேலும் இக்கருவிகளில் பூச்சிகளை பிடிக்கும் திறனும், வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும் போது 20 : 1 முதல் 121 :1 ஆக இருக்கிறது.

இக்கருவிகளை 2-3/25 கிலோ தானியக்கூடைகளில் (28 செ.மீ விட்டமும், 39 செமீ நீளமும்) உபயோகிக்கும் போது பூச்சிகளை கூட்டமாக பிடிக்கும் திறனுடையவை. ஆனால் இக்கருவிகள் தானியங்களின் முதல் 6 அங்குல உயரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஏனெனில் தானிய சேமிப்பின் ஆரம்ப காலத்தில் பூச்சிகளின் தாக்கம் இப்பகுதிகளில் அதிகமாக இருக்கும். இக்கருவிகள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பூச்சிகளை 10-20 நாட்களில் நீக்கிவிடும்.


 

click me!