மட்கு உரத்தில் இருக்கும் குறைபாடுகள்
** பல காரணங்களால் மட்கு உரத்தின் வேளாண் பயன்பாடு குறைவாக உள்ளது
** அதிக எடையுடன் இருப்பதால் போக்குவரத்து செய்வதற்கு செலவு அதிகமாகிறது
** மட்கு உரத்தின் ஊட்டச்சத்து மதிப்பு இரசாயன உரங்களை விட குறைவாகவும் உள்ளது. ஊட்டச்சத்துக்களை வெளியிடும் அளவு குறைகிறது. ஆகவே, இது பயிர்களுக்கு ஊட்டசத்து குறுகிய காலத்தில் அளிக்க முடியாததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது
** மட்கு உரத்தின் ஊட்டச்சத்துக்களின் அளவு இரசாயன உரங்களுடன் ஒப்பிடும் போது மாறுபடுகிறது
** கடின உலோகங்கள் மற்றும் மட்கு உரங்களில் உள்ள மாசுகளின் அளவு முக்கியமாக நகராட்சி திட கழிவுகளில் அதிகமாக உள்ளது. இந்த மாசுபட்ட மட்கு உரத்தை பயிர்களுக்கு பயன்படுத்துவது முக்கியமாக பிரச்சினையாக உள்ளது.
** நீண்டகாலம் அதிக அளிப்பு மட்கு உரத்தால் ஏற்படும் உப்பு, ஊட்டச்சத்து அல்லது கடின உலோக படிவு பயிர் வளர்ச்சி, மண் உயிரிகள், நீர் தரம், விலங்கு மற்றும் மனித இனத்தைப் பாதிக்கிறது.