மட்கு உரமாக்குதல்
இயற்கை முறையில் அங்ககப்பொருள்களை நுண்ணுயிரிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில் மட்கச் செய்தல் அல்லது அழுகச் செய்தே மட்கு உரமாகும். அங்ககப் பொருட்களான பயிர்க்குப்பைகள், விலங்குகளின் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், ஆகியன மட்கச் செய்தபின் மண்ணில் உரமிடுவதற்கு ஏற்ற தகுதியைப் பெறுகிறது.
மட்கு உரம் என்பது அங்ககப் பொருளின் வளமான ஆதாரமாகும். மண் அங்ககப் பொருள் மண் வளத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகவே நிலைக்கும் வேளாண் உற்பத்திக்கு உதவுகிறது.
தாவர ஊட்டச்சத்துக்கு ஆதாரமாக இருப்பது மட்டுமல்லாமல், மண்ணில் இயல், வேதி உயிர்ப் பண்புகளை மேம்படுகிறது. இந்த மேம்பாடுகளின் விளைவாக, மண் வறட்சி, நோய், நச்சுத்தன்மைக்கு அதிக எதிர்ப்பாக மாறுகிறது. ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது. அதிக நுண்ணுயிர் செயல்களால் நுண்ணூட்ட சூழற்சியை கொண்டிருக்கிறது.
இந்த நன்மைகளால், பயிர்டுவதில் உள்ள சிரமங்கள் குறைகின்றன. அதிக மகசூல், செயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவது குறைகிறது.
மட்கிய உரம் தேவை ஏன்?
பொருள்களான லிக்னின். செல்லுலோஸ், லொமி செல்லுலோஸ், பாலிசாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல, தேவையில்லாத உயிர்ப்பொருள்களில் உள்ளன. இந்தப்பொருட்களை அப்படியே மூலப்பொருள்களாகிய பயன்படுத்த முடியாது.
இந்த கலவைப் பொருட்கள் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்தாக மாற்றப்படுகின்றன. மண்ணில் இந்த பொருட்களை இடும் போது எந்தவிதமான மாற்றம் செய்யாமல் அப்படியே இடுகிறோம்.
பின் மண்ணில் மாற்றங்கள் நடந்து, பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. ஆகவே, மாற்றம் நடக்கக்கூடிய காலம் தவிர்க்க முடியாது.