குருணைத் தீவனத்தை நீங்களே தயாரிக்கலாம். எப்படி?

You can prepare the granite fodder. How?



குருணைத் தீவனம்

ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: 

சோயாபீன்ஸ் மாவு - 210 கிராம், 

கருவாட்டுத்தூள் - 203 கிராம், 

இறால் கருவாட்டுத்தூள் - 200 கிராம், 

சோளமாவு - 173 கிராம், 

கோதுமை மாவு - 200 கிராம், 

உப்பு - 4 கிராம், 

வைட்டமின் பொடி - 7 கிராம். 

இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்துவிடும்.

செய்முறை 

இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு கலந்து வைத்துக்கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி ஐந்து நிமிடம் கிளறி, குக்கரில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகிவிடும்.  அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

click me!