மீன் வளர்ப்பின்போது தீவனம் வீணாகமல் இருக்க இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்; நிச்சயம் உங்களுக்கு கைக்கொடுக்கும்...

 |  First Published Dec 19, 2017, 11:59 AM IST
Use these tips to prevent fodder wastage during fish breeding Sure you will take care of ..



** கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன. 

** இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. 

** அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.  

** தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள். 

** கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. 

** ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. 

** புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை. 

** இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டுவிடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.
 

click me!