1.. கிராமப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் அட்டைப்பெட்டிஅல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித்தவிடு அல்லது மணலை நிரப்பவும்.
2. இவ்வாறு நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீதுகுஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை வைக்கவும்.
3. வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட்வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீதுபரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில்தொங்கவிடவும்.
4. 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில்மின்சார பல்புக்கும், கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தைஅவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.
5. உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடியவெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரானவெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.
6. முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒருநாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறைதிருப்பி விடவேண்டும்.
7. 18வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிடவேண்டும்.
8. 18வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெதுவெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது 1நிமிடம் பரப்பி விடவும். இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரைஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்குஇருக்கும்.
9. மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடுசெய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.
10. இந்த எளிய முறையை வாத்து, வான் கோழி, கினிக் கோழிமற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்