கிருமிநாசினி செய்ய தேவையானவை
15 லிட்டர் தண்ணீர்
1 கிகி நாட்டு சர்க்கரை
1 லிட்டர் இஎம் கரைசல்
செய்முறை
இவற்றை ஒன்றாக கலந்து வைத்து மூடி வைக்க வேண்டும்.
அதில் உள்ள வாய்வு வெளியேறுவதற்காக தினமும் ஒருமுறை திறந்து மூட வேண்டும்
ஒரு வாரம் முடிந்ததும் பழத்தின் மனம் வரும்.
இதை எடுத்து விவசாயத்திலும் பயன்படுத்தலாம். கோழி கொட்டகையிலும் பயன் படுத்தலாம்
கோழிகளின் குடிக்கும் தண்ணீரில் பெரிய கோழிக்கு 1 முதல் 1.5 மிலி, குஞ்சு கோழிக்கு 0.5 மிலி விகித்த்தில் தண்ணீர் சேர்க்காமல் கொடுக்க வேண்டும்
இதன் நன்மைகள்
1. கோழி கொட்டகையில் கிருமி நீக்கம் செய்ய இதை பயன்படுத்தலாம் முற்றிலும் இயற்கையானது
2. கோழிகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்புசக்தியை கொடுப்பதால் கோழிகளின் இறப்பு குறையும்
3. விவசாயத்திலும் பயன்படுத்தலாம்
4. இதை கொடுப்பதால் கோழி எச்சத்தின் வாடை வருவதில்லை எனவே தினமும் சுத்தம் செய்ய தேவையில்லை