1.. கோழிகள் கண் வீக்கம்
கோழிகள் கண் வீக்கத்திற்கு காலநிலை மாற்றமமும் ஒரு காரணம். வெப்பம் அதிகரித்து வருவதால் இந்த பிரச்சனை வரும்.
இதற்கு தினமும் மோர் மற்றும் கற்றாழை மிக்ஸியில் அரைத்து பண்ணையில் வைத்து விடவும். கோழிகள் அதுவாக அதனை குடித்து விடும். ஒரு வாரத்தில் இந்த பிரிச்சனை முடிவுக்கு வரும்.
2. கொரைசா நோய்
அதிக தாக்குதல் இருந்தால், சிறிய பிளஸ்டிக் டப்பியில் விக்ஸ் அல்லது ஜண்டுபாமை உள்புறம் பக்க வாட்டில் தடவி, கோழி குஞ்சுகளை இந்தனுள் விட்டு மேலே அட்டையை வைத்து மூடிவிடவும்.
1 – 2 நிமிடம் கழித்து, குஞ்சுகளை எடுத்து வெளியில் விடவும் (அதிக நேரம் இதனுள் விடவேண்டாம்). இது போல ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை நேரம் செய்ய வேண்டும்.
கொரைசா வரும் முன்காக்க
– சின்ன வெங்காயம் ஒரு கைபிடி
– இஞ்சி ஒரு விரளி
– பூண்டு 4 பல்
– மிளகு 6
– துளசி இலை ஒரு கைபிடி
இவை அனைத்தையும் அரைத்து சாறு எடுத்து,
20 நாள் குஞ்சுகளுக்கு = 4 சொட்டு
40 நாள் குஞ்சுகளுக்கு = 6-7 சொட்டு
40 நாளுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு = 10 சொட்டு
1கிலோ எடை உள்ள குஞ்சுகளுக்கு = 15 சொட்டு வரை
காலை = 6 மணிக்கு
மதியம் = 12 மணிக்கு
மாலை = 6 மணிக்கு என இரண்டு நாள்கள் கொடுக்க வேண்டும்.