விதையின் அடிப்படை முதல் சிறப்பியல்புகள் வரை ஒரு பார்வை…

 |  First Published Aug 26, 2017, 12:48 PM IST
The first characteristic of the seed is a vision of ...



விதை

விதை என்பது விதை உறையால் சூழப்பட்ட ஒரு மிகச்சிறிய கருவுற்ற செடியாகும். பொதுவாக இதனுள் சில சேமிப்பு உணவுப் பொருள் காணப்படும். சில வகைத் தாவரங்களில் விதைகள் கொட்டை/பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது கருவுருதலுக்குப் பின் மூடிய மற்றும் திறந்த வகைத் தாவரங்களில் காணப்படக் கூடிய ஒரு வகை முதிர்ந்த சூல்களின் விளைபொருட்கள் ஆகும்.

Tap to resize

Latest Videos

அது தாய்செடிகளிலன் ஒரு வித வளர்ச்சி ஆகும். விதை உற்பத்தியானது பூத்தல் மற்றும் மகரந்தச் சேர்க்கையில் தொடங்குகிறது. கருமுட்டையிலிருந்து கரு வளர்தல் ஆரம்பித்து சூலக அறையிலிருந்து விதைஉறை உருவாதல் வரையில் விதை உற்பத்தி முடிவடைகிறது.

விதையின் முக்கியப் பகுதிகள்

கரு

கரு வளர்ச்சிக்குத் தேவையான சத்துப் பொருட்களை அளித்தல்

விதை உறை

கரு

கரு என்பது ஒரு இளஞ் செடி. இது முறையான சூழ்நிலைகளில் புதிய முழு செடியாக வளர்ச்சி அடைகிறது. ஒரு வித்திலைத் தாவரங்களில் ஒரு விதை இலையும், இருவித்திலைத் தாவரங்களில் இரு விதை இலையும் மற்றும் திறந்த விதை தாவரங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதை இலையும் காணப்படுகிறது.

முளைவேர் என்பது விதைக்கருவின் வேர் ஆகும். முளைக்குருத்து என்பது கருத்தண்டு ஆகும். விதை இலை இணைந்துள்ள புள்ளிக்கு மேல் உள்ள தண்டு வித்திலை மேல்தண்டாகும். விதையிலை இணைப்பிற்கு கீழ் உள்ள தண்டு வித்திலை கீழ்த்தண்டாகும்.

விதையின் உள்ளே கருமுட்டையிலிருந்து செடி வளர்வதற்கான சத்துப் பொருள்களின் சேமிப்பு உள்ளது. சேமிப்பு சத்துப்பொருள்களின் தன்மை தாவரங்களின் வகைக்கேற்ப மாறுபடுகிறது. பூக்கும் தாவரங்களில் விதை சேமிப்பு கரு சூழ்தசையிலிருந்து தொடங்குகிறது.

கரு சூழ்தசை பெற்றோர் செடிகளில் இரட்டைக் கருவுறுதல் மூலம் உருவாகிறது. மும்மைய கருசூழ்தசைகளில் எண்ணெய் அல்லது மாவுப் பொருள்கள் மற்றும் புரதப் பொருள்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

திறந்த விதைத் தாவரங்கள் பொதுவாக கூம்புடைய தாவரங்களில் சேமிப்பு உணவு தசை என்பது பெண் கேமிட்டோ ஃபைடின் ஒரு மைய சந்ததியின் ஒரு பகுதி ஆகும். சில இனங்களில் முளைக்கருவானது சூழ்தசை அல்லது பெண் கேமிட்டோபைட்டில் காணப்படுகிறது.

விதை முளைக்கும் போது செடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கருசூழ்தசையிலிருந்து உட்கொள்ளப்படுகிறது. மற்றவைகளில் கருசூழ்தசை விதைக்கருவினால் உட்கொள்ளபட்டு பின் விதை வளர்ச்சியின் போது வளர்ச்சி அடைகிறது. முளைக்கருவில் உள்ள வித்திலையானது சத்துப்பொருள்களால் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த வகை இனங்களில் விதை முற்றும் தருணத்தில் கருசூழ்தசை உண்டாவது இல்லை. இந்த வகை இனங்களை சூல்தசையில்லா விதை என்று அழைக்கப்படுகிறது.

பீன்ஸ், பட்டாணி, சூரியகாந்தி மற்றும் முள்ளங்கி விதை முற்றும் போது விதையில் கரு சுழ்தசை காணப்பட்டால் அதற்கு சூல்தசையுள்ள விதை என்று பெயர்.

விதை உறையானது சூலகத்தைச் சுற்றியுள்ள சூல் உறையிலிருந்து உருவாகிறது. சில வகை விதைகளில் விதை உறை மெல்லியதாகவும், (நிலக்கடலை) சில வகைகளில் கடினமானதாகவும் (தேங்காய்) காணப்படுகிறது. விதை உறையானது கருச்சிதைவு மற்றும் கரு உலர்தலிலிருந்து பாதுகாக்கிறது.

உறையில் காணப்படும் ஒரு சிறிய இணைப்பிற்குப் பெயர் ஏரில் என்று அழைக்கப்படுகிறது. சில வகை விதைகளில் விதை உறையில் காணப்படும் தழும்பிற்கு ஹைலம் என்று பெயர்.

விதையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பியல்புகள்

வேளாண் உற்பத்தியின் முக்கிய மூலதனம் மற்றும் இடுபொருள் விதையே ஆகும். மற்ற இடுபொருட்களின் பயன்பாடும் இதனைச் சார்ந்தே உள்ளது. நல்ல வீரியமான விதையானது அனைத்து வழிவகைகளையும உபயோகப்படுத்தி கொண்டு ஒரு உற்பத்தியாளருக்கு சிறப்பான வெளியீட்டைக் கொடுக்கும்.

விவசாயிகளுக்கு நேற்றைய அறுவடையாகவும், இன்றைய நம்பிக்கையாகவும், செல்வ வளம் தரும் பொருளாகவும் விதை அமைகிறது. சிறப்பான மண் வளத்தில் விதைக்கப்பட்ட சிறப்பான விதை மேலும் சிறந்த அறுவடைக்கு வழிவகுக்கும். மேலும் இது இரு தலைமுறைகளின் இணைப்பாகச் செயல்படுகிறது.

click me!