பயிர் வரிசை பகுதி உழவு
வளைப் பலகைக் கலப்பைக் கொண்டு முதன்மை உழவு மட்டும் செய்து சட்டிக்கலப்பை உழவு மற்றும் கட்டி உடைத்தல் உழவு போன்ற இரண்டாம் உழவுகளை தவிர்த்தல் உழவானது பயிர் வரிசைப்பகுதியில் மட்டும் செய்யப்படுகிறது.
கலப்பை நடவு உழவு
மண்ணை உழுத பின், ஒரு தனித்துவமான விதைப்புக் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வரிசை பகுதி மட்டும் பண்படுத்தப்பட்டு விதைகள் விதைக்கப்படுகின்றன.
டிராக்டர் சக்கர பயிர் நடவு
வழக்கமான உழவு செய்யப்படுகிறது. விதைத்தலுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டரின் சக்கரம் வரிசைப் பகுதியை பண்படுத்துகிறது.
சுழி உழவு முறை
உழவற்ற நிலையையே சுழி உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ சுழி உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த உழவு நடவு முறை
சுழி உழவுகளில் ஒரு முறை ஆகும் இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல் விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் கத்திப்பகுதி சீரமைக்கிறது மற்றும் (பிளான்டர் / (Planter Shoe) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.
சுழி உழவு முறையில் களைக் கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன், களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா பாராவோட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.
தாள் போர்வை உழவு
பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவகாலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில், தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும் இதன் மூலம் மண் இளகுகிறது தாவரக் கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின் போது, மண்ணை 12 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுகிறது. ஆழத்தை பொறுத்து, அடுத்து வரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக் கலப்பை (Disc Type) போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்குகிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.