குறைவான உழவு முறை
பழமையான உழவு முறையை விட குறைந்த உழவு முறையில் ஏற்படும் மண் இடர்பாடுகள் மிகக் குறைவே. குறைந்த உழவு முறையின் முக்கியக் குறிக்கோள், ஒரு நல்ல விதைப்படுக்கை, விரைவாக விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழல் போன்றவற்றை ஏற்படுத்தப் போதுமான குறைந்தபட்ச உழவே ஆகும்.
குறைந்த உழவு முறையின் பயன்கள்
1.. தாவர கழிவுகளின் மட்கு உரத்தினால் மண்வளமும், நன்மையும் கூடுகிறது. மேன்மை அடைகிறது.
2.. அதிகத் தாவரங்கள் மற்றும் மக்கும் நிலையில் உள்ள தாவரங்களின் வேர்களினால் நீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.
3.. மேம்பட்ட மண் கட்டமைப்பினால் வேர் வளர்ச்சிக்கு தடை குறைவாகவே இருக்கும்.
4.. கன உழவு இயந்திரங்களின் இயக்கம் இல்லாததினால் குறைவான மண் இறுக்கமே இருக்கும் மற்றும் பழமையான உழவு முறையை விட, குறைவான மண் அரிப்பு குறைவாகவே இருக்கும்.
5.. இவ்வகை நன்மைகள் பெரு மற்றம் குறு நயமிக்க மண் பதம் கொண்ட மண்ணில் இரண்டு முதல் சான்றாண்டுகள் மேல் குறைந்த உழவு முறையைக் கடைப்பிடிக்கும் போது ஏற்படும்.
குறைந்த உழவு முறையினால் ஏற்படும் தீமைகள்
1.. குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும்.
2.. குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும்.
3.. அவரை மற்றும் பட்டாணி போன்ற பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப்படுகின்றன.
4.. வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.
5.. தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.