மாமரம் கிளை முறிந்து விட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை. மிகுந்த மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
அதாவது அந்த மரத்தில் ஒரு ரகத்தின் காய்கள் மட்டுமே கிடைத்திடும். இப்போது அந்த மரத்தில் நீங்கள் விரும்பும் 30 மா ரகங்களைக் கூட உருவாக்க முடியும்.
இதற்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
நர்சரி நடத்துபவர்களிடம் நம்முடைய தேவையைச் சொன்னால் மரத்தில் ஒட்டுக்கட்டிக் கொடுப்பார்கள்.
ஏற்கனவே வளர்ந்துள்ள நீலம், பேங்களூரா மரங்களை வெட்டி அகற்றாமல், அல்போன்சா, பங்கனப்பள்ளி எந்த ரகத்தை வேண்டுமானாலும் அவற்றில் ஒட்டுக்கட்டிக் கொள்ளலாம்.
முயற்சி செய்து தான் பாருங்களேன்.