நெற்பயிரைத் தாக்கும் கூண்டுப்புழுவை ஒழிக்க சில யோசனைகள்…

 |  First Published Jul 11, 2017, 12:51 PM IST
Some ideas to eradicate paddy hammer ...



நீரில் மீன் போல் வாழும் தன்மையுடையது கூண்டுப்புழு.  இவற்றில் இளம் பச்சை நிற புழுக்கள் இலை நுனிப்பகுதியை சிறிய துண்டுகளாக  வெட்டி பின் உருண்டை வடிவக்கூடுகட்டி அதனுள் இருக்கும்.  இவை பெரும்பாலும் இரவில் பயிரைத் தாக்கும்.

தாக்குதலுக்கான அறிகுறிகள்:

Tap to resize

Latest Videos

இந்த வகை புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி தின்னும்.  தாக்கப்பட்ட பயிரில் குழல் போன்ற கூடுகள் தொங்கி கொண்டிருக்கும்.  பயிரின் நுனி வெட்டப்பட்டு இருக்கும்.  பச்சையம் சுரண்டப்படுவதால் இலைகள் வெள்ளையாக காணப்படும்.  10 சதவீதம் தாக்கப்பட்ட இலைகளும் பொருளாதார சேத நிலையை உருவாக்கும்.

ஒழிக்கும் முறைகள்:

வயலை தொடர் கண்காணிப்பில் வைக்கவும்.  வயல்களில் உள்ள தண்ணீரை முதலில் வடிக்கவும்.  தாக்குதல் இருப்பின் தழைச்சத்தை மேலுரமாக இடுவதை தவிர்க்கவும்.  பின் கட்டுப்படுத்தப்பட்ட  உடன் சீராக பயிரின் தேவை அறிந்து உரமிடவும்.  நீர் தவிர்க்கவும். 

பின் கட்டுப்படுத்தப்பட்ட உடன் சீராக பயிரின் தேவை அறிந்து  உரமிடவும்.  நீர் வடிக்க முடியாத இடங்களில் 1 லிட்டர் மண்ணெண்ணையுடன் 5 கிலோ தவிடு, உமி, மரத்தூளை கலந்து வயல் முழுவதும் நீர் மேற்பரப்பில் பரவும்படி தூவவேண்டும்.  புழுக்கூடுகள் மண்ணெண்ணை கலந்த நீரில் மூச்சு விட முடியாமல் இறந்துவிடும். 

கூண்டுப்புழுக்கள் அதிகம் தென்படும் பகுதியில் 3 சதவீத வேப்ப எண்ணை, 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல், வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தவும். 

இந்த முறைகளை கடைப்பிடித்து கூண்டுப்புழுவை ஒழிக்கலாம்.

click me!