நெல்லில் இலைப்பேன் பூச்சியைக் கட்டுப்படுத்தும் இயற்கை முறை:
ஆடாதொடை, எருக்கு, அரளி, பீனாரி, காட்டாமணக்கு, வேம்பு, நொச்சி போன்ற இலைகளை சேகரித்து ஒவ்வொன்றும் தலா ஒரு கிலோ அளவுக்கு இருக்க வேண்டும்.
இந்த இலைகள் ஒவ்வொன்றையும் கல்லால் அடித்து நச்சி எடுத்து ஒரு பானையில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதனுடன் 5 லிட்டர் பசுவின் கோமியத்தை சேகரித்து ஊற்றவும். ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நொதிக்கவிட வேண்டும்.
பானையை அல்லது டப்பாவை மூடிபோட்டு மூடிவைக்கவும். 10 நாட்களுக்குப் பிறகு பானையை திறந்து ஒரு குச்சியால் கலக்கிவிடவும்.
பிறகு தண்ணீரை வடிகட்டிவிடவும். நொதிக்காமல் இருக்கும் இலைகளையும் அரைத்து வடிகட்டிய தண்ணீரில் போட்டு ஒரு நாள் வைத்திருக்க வேண்டும்.
மீண்டும் பானையிலுள்ள தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொண்டு 1 டான்கிற்கு 1/2 லிட்டர் தெளிவு நீர் ஊற்றி, மீதம் தண்ணீரை கலந்துகொண்டு வயலுக்கு ஸ்பிரே செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 டான்க் அடித்தால் போதும் இலைப்பேன் ஒழிந்துவிடும்.