ரசாயன முறைகளில் எலிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

 |  First Published Jul 11, 2017, 12:36 PM IST
How to control rats in chemical methods



நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை முழுவதும் தடுக்க முடியும்.

புரோமோடையலான்:

Latest Videos

undefined

புரோமோடையலான் கேக்குகளை எலிகள் சாப்பிட்டால் இரத்தம் உறைதலை தடைசெய்யும்.
இவற்றை ஒரு தடவை சாப்பிட்டால் போதும்.  எலிகள் இரத்தம் கசிந்து இறந்துவிடும்.

வார்பரின்:

இதுவும் இரத்தம் உறைதலை தடை செய்கிறது. நான்கு முதல் 5 நாட்கள் தொடர்ந்து வைக்க வேண்டும்.

சிங்க் பாஸ்பைடு:

பாஸ்பைன் வாயு வெளிவந்து இரத்தத்துடன் கலந்து பிராணவாயு வெளியேற்றப் படுகிறது.
இந்த சிங் பாஸ்பைடு நஞ்சை 100 கிராம் அளவில் தயாரிக்க கீழ்க்காணும் பொருட்கள் தேவை.

சிங்க்பாஸ்பைடு – 5 கிராம்

உணவு எண்ணெய் – 15 கிராம்

பொடித்த தானியம் – 40 கிராம்

மாவுப் பொருள் – 40 கிராம்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறு குச்சிக்கொண்டு நன்றாக கலந்து எலிகள் நடமாடும் இடங்களில் வைக்க வேண்டும். 

மருந்து கலந்த உணவை வைக்குமுன் 2 அல்லது 3 நாட்களுக்கு சிங்க்பாஸ்பைடு கலக்காத உணவை வைத்து எலிகளுக்கு நச்சுக்கூச்சத்தைப் போக்கி பழக்கப்படுத்திவிட்டு அடுத்த நாளே நஞ்சு உணவை வைக்க வேண்டும்.

இந்த முறைகளைப் பயன்படுத்தி எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

click me!