வாழை சாகுபடிக்கு ஏற்ற மண் வகைகள் மற்றும் நிலத்தை தயார்படுத்தும் உத்தி…

 
Published : Jun 30, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
வாழை சாகுபடிக்கு ஏற்ற மண் வகைகள் மற்றும் நிலத்தை தயார்படுத்தும் உத்தி…

சுருக்கம்

Soil and soil preparation for banana cultivation

ஏற்ற மண்:

வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால் தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப் பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை மண்வகைகள் மிகவும் நல்லது.

நிலத்தை தயார்ப்படுத்துதல்:

1.. நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும். நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

2.. செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழுஉரம், ஜிப்சம், நெல் உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.

3.. தோட்டக்கால் நிலங்களில் 2x2x2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில் கார்போபியூரான் 30gm DAP 10gm, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழுஉரம் 5kg ஆகியவற்றை இட்டு பின்பு வாழை நடவு செய்யலாம்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!