1.. வாழையின் பக்கக் கன்றுகளை மண்ணிற்கு கீழே உள்ள கிழங்குடன் தாய் மரத்திலிருந்து பிரித்தெடுத்து கிழங்கின் முழுபாகமும் மண்ணிலும், மீதித் தண்டுப்பாகம் வெளியில் இருக்குமாறும் வைத்து நடவு செய்ய வேண்டும்.
2.. பக்கக் கன்றுகளின் ஈட்டி இலைக்கன்றுகள், நீர்க்கன்றுகள் என இரண்டு வகைகள் உள்ளன. ஈட்டி இலைக்கன்றில் அடி பருத்தும், உச்சி சிறுத்தும், இலைகள் குறுகலாகவும் இருக்கும். இதில் கிழங்கு பெரியதாக இருக்கும். ஈட்டி இலைக்கன்றுகள் வீரியமாக வளரும் தன்மை கொண்டதால் அவற்றையே தேர்வு செய்ய வேண்டும்.
3.. பொதுவாக தாய்மரத்திலிருந்து பூ வெளிவந்த சமயத்தில் வெளியாகக்கூடிய கன்றுகளை அடையாளம் கண்டு அவற்றை தேர்வு செய்ய வேண்டும். தாய் மரத்திலிருந்து தாரை அறுவடை செய்கின்ற சமயத்தில் நாம் தேர்வு செய்த கன்றுகளின் வயது 3 மாதங்களாக இருக்கும்.
இம்முறையில் தேர்வு செய்யப்பட்ட கன்றுகளின் மேல்பகுதியை மேலிருந்து 1 அடிவரை உள்ள தண்டுப்பகுதியை கையால் திருகி விட வேண்டும். பின்பு 10 நாட்கள் கழித்து திருகிய பகுதி முழுவதையும் கத்தியால் பிசிறு இல்லாமல் அறுத்து விட வேண்டும். இப்படி செய்வதால் கிழங்கு பெருத்து காணப்படும்.