வெள்ளாடுகளில் சினைக்கான அறிகுறிகள் மற்றும் சினைக்காலம் ஒரு பார்வை...

 |  First Published Jan 16, 2018, 12:47 PM IST
pregnancy period of goat and management



 

1.. வெள்ளாடுகளில் சினைத் தருண அறிகுறிகள்

Tap to resize

Latest Videos

** பெட்டை ஆடு, நிலை கொள்ளாமல் அங்கும், இங்கும் ஓடும்

** தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கும்

** வெள்ளாட்டின் வெளிப்புற இன உறுப்புகள் வீங்கிச் சிவந்திருக்கும்

** பால் கொடுக்கும் ஆட்டின் பால் அளவு குறைந்துவிடும்

** அடுத்த ஆடுகள் மீது தாவும்

** சிறப்பாக, ஆடுகள் வாலைத் தொடர்ந்து விரைவாக அசைத்துக் கொண்டே இருக்கும்

** சில ஆடுகளில், சினைத் தருண அறிகுறிகள் அதிகம் தெரியாமல் இருந்து விடும். இத்தகைய ஆடுகளைக் கடாக்களின் துணையுடன் கண்டு பிடித்துச் சினைப் பிடிக்க வைப்பது அவசியமாகும்.

2.. வெள்ளாடுகளில் சினைக்காலம்

** வெள்ளாடுகளில், சினைக் காலம் 151 நாட்களாகும். ஆகவே ஆண்டிற்கு இருமுறை வெள்ளாடுகளைக் குட்டிகள் ஈன வைக்கலாம். ஆனால், பாலுக்கான இனங்கள் வளர்க்கும்போது ஆண்டிற்கு ஒரு முறை ஈன வைப்பது வழக்கம்.

** நாட்டு ஆடுகளும், தலைச்சேரி, பார்பாரி, வங்காளக் கறுப்பு ஆடுகளும் குட்டி போட்ட 8 வாரங்களுக்குள் சினைப் பருவத்திற்கு வந்துவிடும். ஆனால் பல வெளிநாட்டு இன வெள்ளாடுகள் குட்டி போட்டுப் பல மாதங்கள் ஆன பின்பே சினைக்கு வருகின்றன.

** தராணமாகச் சாணன் ஆடுகள் குட்டி போட்ட 7 மாதங்கள் சென்ற பின்பே முதல் முறையாகச் சினைக்கு வருகின்றன.

** வெள்ளாடுகள், 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைக்கு வரும். சினைத் தருணம் 2 முதல் 3 நாட்களுக்கும் நீடிக்கும். ஆனால், குளிர்காலத்தில் சினைத் தருணம் 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே இருக்கும்.

** வெள்ளாட்டுக் கடாக்கள், பெட்டை ஆடுகளுடன் இருப்பது. அவை சினைப் பருவத்திற்கு வரத் தூண்டி கருத்தரிக்க வைக்கின்றன எனப் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

click me!