வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்
** வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும்
** செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது
** வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது
** வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும்
** வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும்
** செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன
இனப் பெருக்கமும்
** வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும்.
** நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும்.
** பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் தமிழகப் பகுதி சாட்டு ஆடுகள் ஆகியவை ஆண்டு முழுவதும் சினைக்கு வரும்.
** எனினும், வறட்சியில்லாமல், மழை பெய்து புல் பூண்டு வளர்ந்துள்ள சூழ்நிலையிலேயே வெள்ளாடுகள் சினைக்கு வந்து நன்கு கருத்தரிக்கின்றன.