வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் எப்படி நடக்கிறது? தெரிஞ்சுக்குங்க...

 |  First Published Jan 16, 2018, 12:29 PM IST
how to do artificial productive system in sheep



 

வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் 

Tap to resize

Latest Videos

** பல வெளிநாடுகளில், வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. நமது நாட்டில், மாடுகளில் செயற்கை முறை இனவிருத்தி மிக நல்ல முறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகின்றது. 

** அவ்வாறே உறைவிந்து மூலமும் கருவூட்டல் சிறப்பாக நடந்து வருகின்றது. வெள்ளாடுகளில் ஏன் இந்தச் சுணக்கம்? வெள்ளபட்டுக் கடா விந்து, விந்து கலக்கும் திரவத்துடன் பயன்படுத்தும் முட்டையின் மஞ்சள் கருவுடன் செயல்பட்டு, திரிந்து விடுகின்றது. 

** ஆகவே, விந்து அணக்களை விந்தின் திரவத்திலிருந்தி பிரித்து அதன் பின் முட்டை மஞ்சள் மற்றும் திரவம், கிளிசரால் சேர்த்து மாட்டு விந்தைப் போல் உறை நிலையில் சேமிக்கும் நடைமுறை நமது நாட்டிற்கும் வந்துவிட்டது. 

** பெய்ப் நிறுவனத்தில் இப்பணி நடைபெற்று வருவதைப் பார்த்துள்ளேன். செயன்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இப்பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் கருவூட்டல் நடைமுறைக்கு வரும்.

பண்ணையில் உள் இனச் சேர்க்கையால் கேடுகள் வராமல் தவிர்க்க:

** பண்ணையில் பொலி கடாக்களை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். 

** பண்ணையாளர்கள் தங்களுக்கிடையே கடாக்களை மாற்றம் செய்து கொள்ளலாம். 

** கடாவை அதனால் பிறந்த குட்டிகளுடன் இனச் சேர்க்கை செய்யக் கூடாது. அவ்வாறே பிறந்த குட்டிகளுக்கிடையேயும் இனவிருத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது.

** ஓரிரு ஆடுகள் வைத்திருப்பவர்கள், பொலிகடா பராமரிப்பு கடினமானதாகும். 

** இனவிருத்தியில் செயற்கை முறைக் கருவூட்டல் பல சிக்கல்களைத் தீர்க்கும்.

click me!