வெள்ளாடு இனவிருத்தியில் உள் இனச்சேர்க்கை மற்றும் வெளி இனச்சேர்க்கை என்று இரண்டு வகைகள் உண்டு.
1.. உள் இனச்சேர்க்கை
மிக நெருங்கிய உறவு நிலையில், இனச் சேர்க்கை செய்வதாகும். இத்திட்டத்தின் மூலும் பர அடிப்படை ஆய்வுகள் மற்றும் உறவுள்ள குடும்பங்கள், புது இனங்கள் தோற்றுவுக்க உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது.
உயர்வினங்களில், புது இனங்கள் தோற்றுவிக்கப்படும்போது மட்டுமே ஆரம்பக் கட்டங்களில் உள் இனச் சேர்க்கை முறை கையாளப்படுகின்றது. ஆனால், கோழிகளில் கலப்பினக் குஞ்சுகள் உற்பத்திக்கும், ஆய்வுக்கூட எலிகள் , கினி, பன்றிகள், முயல் போன்றவை ஒரே மாதிரியாக இருப்பதற்காகவும் உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது.
சாதாரணப் பண்ணையாளர்கள் இந்த இனச் சேர்க்கை முறையைப் பின்பற்றலாகாது. இம்முறையில் குட்டிகளுக்கிடையேயும், குட்டிகள் அதன் தந்தை (Sire) -க்குமிடையேயும், தொடர்ந்து இனச் சேர்க்கை செய்து தேர்வு முறையில் நல் இனம் தோற்றுவிக்கப்படும்.
2.. வெளி இனச் சேர்க்கை (Out Breeding)
இவ்வினச் சேர்க்கை முறையே சாதாரணப் பண்ணையாளர்கள் பின்பற்ற வேண்டியதாகும். பல வெள்ளாட்டுப் பண்ணையாளர்கள் ஒன்று அல்லது இரண்டு வெள்ளாட்டுக் கடாவைத் தொடர்ந்து இனவிருத்திக்குப் பயன்படுத்துவார்கள்.
இது பெரும் தீங்கை ஏற்படுத்திவிடும். வளர்ச்சி வீதம் குறைபடுதல், பால் உற்பத்தி குறைவு. இனவிருத்திப் பாதிப்பு ஆகிய கேடுகள் ஆடுகளைப் பாதிக்கும்.