வெள்ளாடுகளுக்கு இந்த மாதிரியான தீவனங்களை கொடுத்தும் அவற்றிற்கு தேவையான  சத்துகளை கிடைக்க செய்யலாம்...

 |  First Published Jan 12, 2018, 1:31 PM IST
Giving these types of fodder to goats can be made available to them.



உளுந்துச் செடி மற்றும் தட்டைப்பயிற்றுச் செடி

** நெல் அறுவடைக்குப்பின், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலும், உளுந்து விதைக்கப்படுகின்றது. பல இடங்களில் , உளுந்து நெற்றுகள் பிரிக்கப்பட்டு, அதன் செடிகள், நன்கு காயவைத்து வைக்கோல் போரின் இடையே சேமித்து வைக்கப்படுகின்றன. 

** இது சிறந்த முறை, ஆனால், தஞ்சை போன்ற இடங்களில் உளுந்துச் செடி மொத்தமாகப் பிடுங்கப்பட்டு, உளுந்தைப் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடிக்கப்படுன்றது. இதன் காரணமாகச் சத்துமிகு இலைகள் உதிர்ந்து பொடியாகி விடுகின்றன. 

** சுற்றுப் புறங்களில் தூசியை உண்டு பண்ணிச் சூழல் கேட்டையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே யாவரும் உளுந்து நேற்றைப் பிரித்து எடுத்துச் செடியை நன்கு காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். 

** முக்கியக் குறிப்பு நன்கு உலர வைக்காத செடிகளில் பூஞ்சைக் காளான் தாக்குதல் ஏற்பட்டுத் தீவனத்திற்குப் பயன்படாமல் போய்விடும்.

** மழைக்காலங்களில், புன்செய் மற்றும் மேட்டு நிலங்களில் தட்டைப் பயறு பயிரிடப்படுகின்றது. இதன் கொடியையும், பயற்றின் நெற்றைப் பிரித்தபின் காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். அத்துடன் உறுந்து, பயறு நெற்றுகளின் தோலையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.

பலாத்தோல் மற்றும் கொட்டை

** பலாப்பழத் தோல் சிறிதாக நறுக்கப்பட்டு, வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். 

** பொதுவாக வாழைப்பழம் விற்கும் பெட்டிக் கடைக்காரர்கள் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுவாகவே பழக் கடையில் பழத் தோலைப் போடக் கூடை ஒன்று வைத்திருப்பார்கள். வெள்ளாடுகள் வாழைப்பழத்தோலை விரும்பி உண்ணும்.

click me!