** நமது நாட்டு வெள்ளாடுகள் சிறியவை. பால் உற்பத்தி திறன் குறைந்தவை. வளர்ச்சி வீதமும் குறைவானவை. ஆனால் விரைவில் பருவம் எய்தி, ஆண்டுக்கு இருமுறை ஈனக் கூடியவை. இக்குண நலன்கள் இறைச்சி உற்பத்திக்கு ஏற்றவை.
undefined
** வெளிநாட்டினங்கள், பெரியவை. பால் உற்பத்தித் திறன் உள்ளவை. ஆனால் ஆண்டிற்கு ஒருமுறைதான் குட்டி போடும். மேலும் குட்டி போட்ட 6 – 7 மாதம் கழிந்த பெட்டை ஆடுகள் முதல் முறையாக சினைப் பருவத்திற்கு வரும்.
** ஆகவே ஆண்டு முழுவதும் சினைக்கு வந்து இருமுறை குட்டி போடும் நமது நாட்டினத்தின் குணமும். குட்டி போட்ட இரண்டு மாதத்தில் சினைக்குவரும் தன்மையும் காப்பாற்றப்பட்ட வேண்டும்.
** அதே வேளையில், பெரிய உடலமைப்பும், பால் அதிகம் கொடுக்கும் குண நலனும், நமது நாட்டின் ஆட்டில் இணைக்கப்படும்படி ஒரு கலப்பினம் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
** பொதுவாக நம் தமிழ்நாட்டிலுள்ள கொடி ஆடுகளுடன் சமுனா பாரி மற்றும் ஆங்கிலோறுபியன் இன ஆடுகளைக் கலப்பின உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
** பள்ளை ஆடுகள் மற்றும் பல குட்டிகள் ஈனும் நாட்டு ஆடுகளுடன் தலைச்சேரி மற்றும் சானன் இன ஆடுகளைக் கலப்பின உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
** மாட்டினத்தில் கலப்பின உற்பத்தி செய்வது போல 50% – 75% மற்றும் 62.5% கலப்பின உற்பத்தி செய்து, நமக்கு ஏற்ற குணங்கள் அதில் இருக்கும்படி தீவிரமாகத் தேர்வு மேற்கொண்டு தொடர்ந்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
** ஆர்வம் உள்ள தனிப் பண்ணையாளர் இவ்வகையில் பல தலைமுறையில் இனச்சேர்க்கை செய்து, ஒரு புது இனம் உண்டாக்கி விட முடியும்.
** புது இனம் தோற்றுவிக்கும்போது, கடுமையாகத் தேர்வு செய்தும், தகுதியற்றனவற்றைக் கழித்தும், இனப் பெருக்கம் செய்ய வேண்டும்.