1.. பண்ணைக்கழிவுகளை சேகரித்தல்
பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் பண்ணைக்கழிவுகள் மக்கச்செய்யும் இடத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பண்ணைக்கழிவு மக்கும் இடம் பண்ணையில் ஏதாவது ஒரு மூலையில் நல்ல சாலைப்போக்குரத்துக்கு ஏதாவது இருக்க வேண்டும். நீர் ஆதாரம் போதுமான அளவு இருக்க வேண்டும்.
பண்ணைக்கழிவுகளை மக்கும் இடத்தின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டு, அதற்கு பின் பிற மக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
2.. கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக்குதல்
மக்குவித்தலின் போது கழிவுகளின் துகள்களின் அளவு முக்கிய பங்கு வகிக்கும். அதனால் அக்கழிவுகளை மக்குவிப்பதற்கு முன்பு அவற்றை சிறு சிறு துகள்களாக்க வேண்டும். அவற்றை கையினால் செய்யும்போது வேலை ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள். அதனால் இப்பணிக்கு, துகள்களாக்கும் இயந்திரத்தை பயன்படுத்தலாம். துகள்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 2 முதல் 2.5 செ.மீ ஆகும்.
3.. பச்சைநிறக் கழிவுகளையும் பழுப்பு நிறக் கழிவுகளையும் ஒன்றாக கலக்குதல்
கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான், மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால், மக்குதல் நடைபெறாது.
கரிமச்சத்து மற்றும் தழைச்சத்தின் விகிதத்தின் அளவு சிறியதாக இருந்தால் மட்டுமே மக்குதல் நடைபெறும் அந்த விகிதம் கிடைப்பதற்கு, கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.
க்லைரீஸீடியா இலைகள், பார்த்தீனியம் களைகள், அகத்தி இலைகள் ஆகியவை பசுமைக் கழிவுகளாகும். வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புல் ஆகியவை கரிமச்சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளாகும் .
இவ்விரண்டு கழிவுகளையும் சேர்த்து மக்க வைத்தால், அக்கழிவுகள் விரைவாக மக்கிவிடும். விலங்குகளின் கழிவுகளிலும் தழைச்சத்து அதிகம் இருக்கும்.
மக்குவித்தலின்போது, அதிகம் கரிமச்சத்து, அதிகம் தழைச்சத்து உள்ள கழிவுகளை மாற்றி மாற்றி போடும் போது, விரைவாக அவை மக்கிவிடும்.