பண்ணை கழிவுகளை இந்த முறையில் மக்க வைப்பது மிக எளிது...

 |  First Published Dec 20, 2017, 12:53 PM IST
It easy to keep farm waste in this way



பண்ணை கழிவுகளை மக்க வைத்தல்

** பண்ணைக்கழிவு என்பது அறுவடைக்குபின் வயலில் எஞ்சியுள்ள (மீதமுள்ள) இலாபம் தர இயலாத ஒரு பகுதி ஆகும். 

** வெவ்வேறு பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர் கட்டைகள் மற்றும் பிற கழிவுகள் அறுவடையின்போது கழிவாக கிடைக்கும். 

** கதிர் அடித்தல் மற்றும் அடித்தலுக்கு பின் செய்யப்படும் செய்முறைகளின் போது கிடைக்கும் தேவையற்ற பொருட்கள் முறையே, நிலக்கடலைத் தொலி, புண்ணாக்கு, நெல் உமி, சோளம், கம்பு  மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றின் கதிர்கள் மக்கவைத்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. 

** அதிகப்படியான உயிர் திடக்கழிவுப்பொருட்களுக்கு ஆதரவாக தோன்றுபவை வயலில் இருந்து நிராகரிக்கப்படும் சோளம், மக்காச்சோளம், மொச்சை, பருத்தி மற்றும் கரும்புகளின் மிகுதிகள் ஆகியனவாகும். 

** தமிழ்நாட்டில் 190 இலட்சம் டன் பண்ணைக் கழிவுகள் மக்கவைத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 

** இதிலிருந்து தழைச்சத்து 1.0 இலட்சம் டன்னும், மணிச்சத்து 0.5 இலட்சம் டன் மற்றும் சாம்பல்சத்து 2.0 இலட்சம் டன்கள் பெறப்படுகின்றன. 

** எனினும் பண்ணைக்கழிவுகளை உரமாக பயன்படுத்துவதற்கு முன் அதனை நன்றாக மக்க வைத்தல் அவசியம்.
 

click me!