நாற்றங்கால் அமைக்க நிலத்தேர்வு:
ஒரு ஏக்கர் நடவு செய்ய வளமான நீர்ப்பாசன வசதி மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் 8 சென்ட் (320 சதுர மீட்டர்) நிலப்பரப்பினை, தேர்வு செய்ய வேண்டும்.
undefined
நாற்றுக்களால் உரம் உடனடியாகக் கிரகிக்கப்பட்டால் குலைநோய் வர வாய்ப்புண்டு. குறைந்த ஊட்டம் காரணமாக இலைப்புள்ளி நோய் வரலாம். ஆகவே நாற்றங்காலுக்கான வயலை ஊட்டம் உடையதாக தேர்வு செய்தல் அவசியம்.
இந்த நிலத்தில் நிழல்படக் கூடாது. மேலும் மின் விளக்குக் கம்பத்தின் பக்கத்தில் இருக்கக்கூடாது.
நாற்றங்கால் அமைக்க நிலத்தயாரிப்பு:
தேர்வு செய்யப்படும் 8 சென்ட் நாற்றங்கால் பரப்பில் அடிஉரமாக 400 கிலோ தொழு உரத்தை இட்டு நன்றாகப் பரப்ப வேண்டும். பின் ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நீர் பாய்ச்சி மண்ணை இளகவைக்க வேண்டும்.
நன்றாக ஊறிய மண்ணில் 2.5 செ.மீ. ஆழத்திற்கு நீர் நிறுத்தி சேற்றுழவு செய்ய வேண்டும். பிறகு 20 மீ X 2 மீ (1சென்ட்) அளவில் மேட்டுப்பாத்திகள் அமைத்து நன்கு சமன் செய்யவேண்டும்.
இரண்டு பாத்திகளுக்கு இடையிலும் பாத்தியை சுற்றிலும் 30 செ.மீ. அளவுள்ள சிறு வாய்க்கால் அமைக்கவேண்டும். எக்காரணத்தை கொண்டும் நாற்றங்காலில் நீர் தேங்காமல் இருக்கவேண்டும்.