மல்லிகை சாகுபடி நுட்பங்கள்…

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 02:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
மல்லிகை சாகுபடி நுட்பங்கள்…

சுருக்கம்

 

கடையம் வட்டாரத்தில் ஏ.பி.நாடானூர், வெங்கடாம்பட்டி, அஞ்சாங்கட்டளை, கடையம் பெரும்பத்து பகுதியில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. 

மல்லிகை பூவில் சிங்கிள் மோக்ரா, டபுள் மோக்ரா, குண்டுமல்லி, ராமநாதபுரம் போன்ற ரகங்கள் ஏற்றதாகும்.ஜூன் முதல் நவம்பர் வரை மல்லிகை நடவு செய்யலாம். 30 செ.மீ.க்கு 30 செ.மீ.க்கு 30 செ.மீ.என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஹெக்டேருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள் நடவு செய்ய வேண்டும்.செடிக்கு சாண உரம் 10 கிலோவும், தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தால் கவாத்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் இட வேண்டும். 

நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ.உயரத்தில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்.மொட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த மனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

சிவப்பு முரணை நோயை கட்டுப்படுத்த டைகோபால் 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நூர்புழுவை கட்டுப்படுத்த டெமிக் குருணைகள் 10 கிராம் செடிக்கு அளவில் வேர் பகுதியை சுற்றி இடவேண்டும். நேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து செடியை சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும்.

இரும்பு பற்றாக்குறை இருந்தால் இலைகளின் ஓரங்கள் வெளுத்தும், மஞ்சளாகவும் காணப்படும். இரும்பு சல்பேட் 5 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். மலர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். ஹெக்டேருக்கு 8 ஆயிரத்து 750 கிலோ மலர்கள் கிடைக்கும். காலை 6 மணி முதல் 8 மணிக்குள் மலர்களை பறித்து வியாபாரத்திற்கு அனுப்ப வேண்டும். 300 காஜ் தடிமனுள்ள பாலிதீன் பைகளில் பூக்களை அனுப்புவதால் 72 மணி நேரம் மலராமல் இருக்கும்

PREV
click me!

Recommended Stories

Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!
Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!