ஐந்தடி வரை வளரும் நெல்பயிர்…

 |  First Published Oct 20, 2016, 2:21 AM IST

பொன்னேரி அருகே சின்னக்காவனம் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 5 அடி உயரத்தில் நெற்பயிர் வளர்ந்து, தற்போது அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது.

Tap to resize

Latest Videos

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் விவசாயத் தொழில் செய்து வருபவர் தேவராஜன். இவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், மீஞ்சூர் ஒன்றிய வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நெற்பயிர், காய்கறி, கீரை வகைகள் ஆகியவற்றை இயற்கை உரங்களை விதைத்து விவசாயம் செய்து வருகிறார்.

இவர் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகளை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகள் பங்கேற்ற வேளாண்மைக் கண்காட்சி மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் சிறப்பு ரயில் மூலம் வேளாண்மை கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சின்னக்காவனத்தைச் சேர்ந்த விவசாயி தேவராஜன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

அங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விதை நெல் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது மாநாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம், வாராணசியில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜி.4 என்ற (சன்னரக அரிசி) நெல் விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதை பத்திரமாக எடுத்து வந்த விவசாயி தேவராஜன், கடந்த மே மாதம் அந்த விதையை தனது நிலத்தில் விதைத்துள்ளார். இதன் பின்னர் செயற்கை ரசாயன கலப்பின்றி தேங்காய் மட்டை, வேப்பம் பிண்ணாக்கு உள்ளிட்ட இயற்கை உரங்களை இட்டுப் பயிரை வளர்த்துள்ளார்.

இந்நிலையில் மெள்ள வளர்ந்து வந்த அந்த நெற்பயிர் தற்போது கரும்புத் தோட்டம் போல் 5 அடி உயரத்தில் வளர்ந்து நிற்கிறது. இதில் நெல் மணிகள் மட்டும் ஒரு அடி உயரத்தில் உள்ளன.

இதுகுறித்து விவசாயி தேவராஜன் கூறியது: "இது போன்று 5 அடி உயரத்தில் நெற்பயிர் வளர்ந்தால் மழைக் காலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதில் இருந்து தப்பிக்கும்.
மேலும் தமிழகம் முழுவதும் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் இந்த நெல் விதையைப் பயிரிடலாம்'.

மேலும் இந்த ஜி.5 நெல் விதையை தமிழக வேளாண்மை அதிகாரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தருவித்து அதை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 150 கிராம் விதையில் விதைக்கப்பட்ட இந்த நெற்பயிரை அறுவடை செய்தால் 7 மூட்டை நெல் வரும்'

click me!