ஜமுனாபாரி  ஆட்டு இனம் - பூர்வீகம் முதல் விற்பனை வரை ஒரு முழு அலசல்...

 |  First Published Mar 30, 2018, 1:41 PM IST
Jamunabari sheep race - a whole parcel up to the first sale of origin ...



ஜமுனாபாரி  

"ஜமுனாபாரி' ஆடு வளர்ப்பில் பணம் கொட்டும். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது. வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். 

ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது. ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. 

முன்னணி அசைவ உணவகங்களில் ஜமுனாபாரி மாமிச வகைகளும் இடம் பெறுகிறது. ஒரு கிலோ தனிக்கறி 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கறியை விலைக்கு வாங்குவதை விட ஆட்டுக்குட்டிகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்ப்போருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. 

மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  

ஏற்றுமதிக்கு உகந்தது: 

ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தைவான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட ஜமுனா ஆட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் வளர்க்கப்படும் ஆடுகள், சென்னை சைதாப்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஆட்டின் கறியை பதப்படுத்தி "டின்'களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். 

பண்டிகை காலங்களில் கறியும், பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் அதிக புரதச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய பாலை கொடுத்து வந்தால், குழந்தை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் வளரும். 

ஜமுனாபாரி ஆடுகள் ராஜஸ்தானில் அதிகளவு வளர்கிறது. அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால், இதில் நோய் எதிர்ப்பு அதிகம். கறியும், பாலும் வாரம் தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை வளர்க்கும். 

ஒரு ஈத்துக்கு மூன்று குட்டிகள் வரை ஈனும். 25 நாள் குட்டி ஒன்றின் விலை 6,000 ரூபாய். கருவுற்ற ஆட்டின் விலை 20 ஆயிரம் ரூபாய். பாசிப்பயறு, துவரை, உளுந்து தூசி மற்றும் கடலை புண்ணாக்கு உணவாக வைக்கப்படுகிறது.

click me!