1.. ஆடுகளில் மேற்கொள்ள வேண்டிய குடற் புழு நீக்கம்
** ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.
** சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.
** சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
** குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
2.. ஆடுகளில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள்
** துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனபெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.
** துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.
** கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.