வெள்ளாட்டுக் கொட்டகைகளின் பாரமரிப்பு முறைகள்:
கொட்டகை முறை.
** வெள்ளாடுகளை நாள் முழுவதும் கொட்டகைக்கு உள்ளேயே அடைத்து தீவனம் அளித்து வளர்க்கப்படுகிறது.
** கொட்டகையை ஆழ்கூளம் அல்லது உயர் மட்ட தரை முறையினால் அமைக்கலாம்
1.. ஆழ்கூள முறை
** தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு கடலைப்பொட்டு, மரத்தூள் மற்றும் நெல் உமி ஆகியவற்றை இட்டு வளர்க்கலாம்.
** இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புது கூளம் போடவேண்டும்.
** இம்முறையில் உண்ணி மற்றும் பேன் தாக்கம் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்
** ஆடு ஒன்றுக்கு 15 சதுர அடி இடம் தேவைப்படும்
2.. உயர் மட்ட தரை முறை
** தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் மர பலகை அல்லது கம்பி வலைகளை கொண்டு அமைக்கலாம்
** ஒட்டுண்ணி தொல்லைகள் மிகவும் குறைவாக இருக்கும்
3.. மேய்ச்சலுடன் கூடிய கொட்டகை முறை.
** மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகையில் வைத்து பசுந்தீவனங்களையும், அடர் தீவனைத்தையும் அளிக்கலாம்.