இதெல்லாம் செய்தால் மண் வளம் உச்சத்தில் இருக்கும்... பிறகு பொன்னு விளையுற பூமிதான்...

 |  First Published May 31, 2018, 1:19 PM IST
If all this is done soil fertility will be at the top ... then the golden bullum is the earth ...



மண் மேலாண்மை

மண்ணை வளப்படுத்த 200 டன் குளத்து மண்ணை ஒரு ஏக்கருக்கு இடலாம். மேலும் பின் சில வருடங்களுக்கு 50 டன் குளத்து மண்ணை இட்டால்போதும்.

Latest Videos

undefined

ஒரு ஏக்கருக்கு உரமாக தெளிக்க, 10 கிலோ வேப்பம் புண்ணாக்குயை 10 லிட்டர் கோமியத்தில் அரை கிலோ கழிவு பெருங்காயத்தோடு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உபயோகிக்கவேண்டும்.

புளிப்பொட்டை வயலில் இட்டால் கோரைப்புல் வராது.1 லிட்டர் வேப்ப எண்ணெயில், 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணியை 3 நாட்கள் ஈரம் காயாமல், ஈர சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து, பின் 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல்  சேர்த்து, அதிகாலை வேளையில் தூவினால் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. 

அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.கரையான் தாக்கப்பட்ட பகுதிகளின் எருக்களை இலைச்சாற்றை பயன்படுத்தலாம்.

வளமற்ற மண்ணாக இருந்தால் அப்பகுதி நிலங்களை எல்லாம் கூட்டாக செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.ஆறுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் குறைந்த மகசூலே கிடைக்கும்.வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் நன்செய் நிலத்திலும், மலை அடிவாரத்தில் இருக்கும் வறண்ட நிலத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.சரிவின் குறுக்கே வயல்களில் கல்தூண் அமைத்தால், மண் சரிவையும் ஈரப்பதத்தையும் காக்கலாம்.

‘வெட்டிவேர்’ புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச்சுற்றி நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம்.வயல் வரப்புகளில் நிரந்தரமாக ஏதாவது தாவரங்களை வளர்த்து வந்தால் அதிக மண் அரிப்பைக் குறைக்கலாம்.புதிய தோட்டாக்கால்கள் பழைய நிலம் அதிக மகசூல் கிடைக்கும்.

தோட்டக்காலப் பயிரைக்காட்டிலும் பயிருக்கு அதிகக் கவனம் தேவை.தண்ணீர் தேங்கக்கூடிய வறண்ட பகுதி சாகுபடிக்கு ஏற்றதல்ல.மண் வகையே, சாகுபடி பயிரை தீர்மானம் செய்யும்.செம்மண் தொடர்ந்து பயிர் செய்ய ஏற்றது.செம்மண்ணை விட கரும்மண் அதிகமாக நீர் பிடித்து வைத்திருக்கும் திறன் உள்ளது.

மணல் கலந்து மண் அநேக பயிர்கள் சாகுபடி செய்ய உகந்ததல்ல.அதிகமாக தொழு உரம் இட்டால் மண் நயம் கூடும்.குளத்து மண் இட்டால் மண் நயம் கூடும்.அங்கக உரம், அனங்கக உரம் இடுவது, மண் தன்மையைச் சார்ந்தது.மழை பெய்தவுடன் களை அதிகமாக முளைத்தால், அது நல்ல மண் வளத்தைக் கொண்டு உள்ளதையே காட்டும்.

ஆடு தின்னாப்பாலை நிலத்தில் வளர்த்தால், அது குறைந்த மண் வளத்தையே காட்டும்.செம்மண்ணை கரும்மண் நிலத்திலோ இல்லை மாற்றியோ இட்டால் மண் வளம் அதிகரிக்கும். கோடைக்காலத்தில் ஆடுகிடையோ, மாட்டுக்கிடையோ அமர்த்தினால் மண் வளம் கூடும்.

click me!