1.. பச்சைகாய் துளைப்பான் புழு
பூச்சிகள் ,பூழுக்கள் காய்களை துளைத்து உண்டு வாழ்கின்றன.தாக்கப்பட்ட காய்கள் தரம் கெட்டு சந்தைக்கு ஏற்பதாக இல்லை.இளம் புழுக்கள் இலைகள் மற்றும் குருத்துக்களை சேதப்படுத்துகின்றன.
undefined
பெண் பூச்சிகள் இலை,பூ,மொட்டுகள்,காய்களின் மீது தனித்தனியாக முட்டைகளை இடுகின்றன.பெண் பூச்சி 300 முதல் 1000 வரை முட்டைகள் இடுகின்றன முட்டைகள் 4முதல்12 நாட்களில் பொரித்து இளம் புழுக்களாக வெளிவருகின்றன.
இந்த இளம் புழுக்கள் 15முதல்25 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து 10முதல்25 நாட்களில் மண்ணில் இருந்து கூட்டு புழு உருவாகி அந்துப்பூச்சி வெளிவருகிறது
கட்டுப்படுத்தும் முறைகள்
தாக்கப்பட்ட செடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்
பயிர் செய்வதற்கு முன் வயலை நன்கு உழுது கூட்டு புழுக்களை வெளியே கொண்டு வந்து அழிக்கலாம்
இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை வெளியே கொண்டு வந்து அழிக்கலாம்
டிரைகோகிரம்மா என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 20ஆயிரம் வீதம் பூக்கும் தருணத்தில் விடவேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5மில்லி லிட்டர் குளோரிபைரிபாஸ் கலந்து தெளிக்க வேண்டும்
என்.பி.வைரஸ் பயிர்கள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்
2.. வெள்ளை ஈ
வெள்ளை ஈயின் இளம் குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலையின் அடிப்பாகத்தில் தென்படும்.இலையின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகளில் வெண்புள்ளிகள் தோன்றும்.பின்பு இலைகள் மஞ்சள் நிறமாக மாறி செடிகளின் வளர்ச்சியை குறைக்கும்.இந்த வெள்ளை ஈக்கள் நரம்பு வெளுத்தல் எனும் நச்சு நொயை உண்டாக்குகிறது.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வயல்களில் களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள குஞ்சுகளை அகற்ற வேண்டும். மஞ்சள் நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை ஏக்கருக்கு 20 என்ற அளவில் வைத்து பூச்சிகளை கவர்ந்தது அழிக்கலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு பாசலோன் எனும் பூச்சிகொல்லியை 2மில்லி வீதம் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும்.
3.. இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2கிராம் மாங்கோசீப் என்ற பூஞ்சாண கொல்லியை நன்கு நனையும்படி தெளிக்கவேண்டும். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெண்டை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.