வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களும் அவற்றை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளும் இதோ...
புள்ளி காய் துளைப்பான்...
undefined
வெண்டை பயிரில் உள்ள பூ காய்கள் தோன்றுவதற்கு முன்பே இளம் தண்டுகளை துளைத்து உட்பகுதியை இந்த புழுக்கள் உண்பதால் தண்டுப்பகுதி வாடி பின்பு காய்ந்து விடுகிறது மேலும் இளம் காய்களை துளைத்து சேதப்படுத்துகிறது.
தாக்கப்பட்ட பூ மொட்டுகள் மற்றும் பூக்களின் இளம் காய்கள் முழு வளர்ச்சி அடையாமல் உதிர்ந்து விடுகிறது வளர்ச்சியடைந்த காய்கள் தாக்கப்பட்டாலும் அவைகள் செடிகளில் இருந்து உதிர்வதில்லை.
காய்கள் வளைந்தும் நெளிந்தும் சுருண்டும் உருமாற்றம் அடைந்து காணப்படும் இதனால் 20முதல் 25%வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது
அந்துப்பூச்சி...
பெண் அந்துப்பூச்சிகள் ஒரு முறை 355 முட்டைகள் வரை இடும். 3முதல் 4 நாட்களில் இருந்து இளம் புழுக்கள் வெளிவருகிறது அது 10முதல்15 நாட்களில் முழு வளர்ச்சி பெற்று அந்துப்பூச்சிகளாக உருமாற்றம் அடைகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
ஏக்கருக்கு 4அல்லது 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். பூக்கள் தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூக்களை அவ்வப்போது வயல்களில் இருந்து அகற்ற வேண்டும். பூச்சிகள் முட்டையிடும் தருணத்தில் டிரைகோகிரம்மா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 4ஆயிரம் வீதம் வெளியிட வேண்டும்
இரைவிழுங்கி இனத்தை சேர்ந்த பச்சை கண்ணாடி பூச்சி,முதல் பருவ புழுக்களை ஏக்கருக்கு 4ஆயிரம் வீதம் விடவேண்டும். இதனால் காய் புழுக்ககளின் முட்டைகளை உணவாக உட்கொண்டு அந்துப்பூச்சி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது
பவேரிய பேசியான என்ற உயிர் பூச்சி கொல்லியை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் நாட்டு சர்க்கரையுடன் கலந்து காலை அல்லது மாலை நேரங்களில் செடி நனையும்படி தெளிக்கவேண்டும்
5% வேப்பம் பருப்பு சாறு தெளிப்பதால் பூச்சியின் தாக்குதல் அனைத்து பருவத்திலும் கட்டுப்படுத்தப்படுகிறது. குளோரிபைரிபாஸ் என்ற பூச்சிகொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5மில்லி லிட்டர் வீதம் கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய்...
சாம்பல் நோய் தாக்கிய இலைகளின் மேற்பகுதியில் சாம்பல் படிந்தது போன்று வெண்மையான பூசணம் காணப்படும்.நோய் தாக்கிய இலைகள் பழுத்து கருகி உதிர்ந்துவிடும் குளிர்காலத்தில் இந்நோயின் தாக்குதல் தீவிரமாக இருக்கும்.
இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பண்டாசிம் அல்லது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனசை போதிய தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.