** கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு 10-லிருந்து 12 டன் வரை உலர்ந்த இலைகள் உற்பத்தியாகிறது. 5-வது மற்றும் 7-வது மாதமானதும் கரும்புப் பயிரிலிருந்து உலர்ந்த பயனற்ற இலைகளை நீக்கும் பருவம் ஆகும்.
** உலர்ந்த இலையில் 28.6 சதவிகிதம் கரிமச் சத்தும், 0.35லிருந்து 0.42 சதவிகிதம் தழைச்சத்தும், 0.04 லிருந்து 0.15சதவிகிதம் மணிச்சத்தும், 0.50லிருந்து 0.42 சதவிகிதம் சாம்பல் சத்தும் உள்ளது. உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மை மேம்படுகிறது. இதனால் மண்ணின் மின்கடத்தும் திறன் குறைந்து, நீரைத் தக்கவைக்கும் திறன் அதிகரிக்கிறது.
** மண்ணில் உள்ள நுண்துளைகளினால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.
** உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால் மண்ணின் அங்கக தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள நுண்துளைகளினால் மண்ணின் கட்டமைப்பு அதிகரிக்கிறது. கரும்பின் உலர்ந்த தோகைகளை மண்ணோடு கலப்பதால் மண்ணின் அடர்த்தி குறைகிறது. மண்ணின் ஊடுருவும் திறன் அதிகரிக்கிறது.
** உலர்ந்த கரும்பு தோகைகளை மண்ணோடு நேரடியாக கலப்பதால் மண்ணின் அங்கக தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் ஊட்டசத்துக்களின் அளவும் அதிகரிக்கின்றது. கரும்பின் உலர்ந்த தோகைகளை எளிதில் மக்கிய உரமாக மாற்றுவதற்கு அஸ்பர்ஜூல்லஸ், பெனிசீலியம், ட்ரைக்கோடெர்மா,ட்ரைக்கரஸ் ஆகிய பூஞ்சாண்களை பயன்படுத்தலாம்.
** மேலும், இத்துடன் ராக் பாஸ்பேட் மற்றும் ஜிப்சம் முதலியவைகளை சேர்ப்பதன் மூலம் மக்கும் திறனை அதிகப்படுத்தலாம்.