மக்கிய உரத்தின் சத்துக்களின் அளவு
ஒவ்வொரு மக்கிய உரத்தின் சத்துக்களின் அளவு, அதற்காக எடுக்கப்படும் கழிவுகளை பொருத்தும் வேறுபடும். பொதுவாக மக்கிய உரத்தில் முதன்மைநிலை ஊட்டசத்தும், இரண்டாம் நிலை ஊட்டசத்தும் இருக்கும். இது அட்டவணை - 1 ல் குறிக்கப்பட்டுள்ளது.
மக்கிய உரத்தில் சத்துக்களின் அளவு குறைவாக இருந்தாலும், தாவரத்திற்கு தேவையான அளவை, இது பூர்த்தி செய்யும்.
மக்கிய உரத்தின் நன்மைகள்
தாவர மற்றும விலங்குகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயர்தர மற்றும் செறிவூட்டப்பட்ட உரமானது பண்ணையிலேயே கிடைக்கிறது.
மக்கிய உரத்தை கலப்பதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுகிறது.
தாவரக் கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளை பொருட்களின் தரம் உயர்கிறது.
மக்கிய உரப் பயன்பாடு
மக்கிய உரமானது, மண்ணின் தன்மையையும், மண்ணின் கரிமச்சத்தையும் அதிகரிக்கும் ஒரு முக்கியப் பொருளாக பயன்படுகிறது. மக்கிய உரத்தை செயற்கை உரத்திற்கு ஈடாக ஒப்பிட முடியாது.
ஆனால், மக்கிய உரமானது மண்ணிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் குறைந்த அளவு கொடுக்கிறது. ஒரு எக்டேருக்கு 5 டன் செறிவூட்டப்பட்ட மட்கு உரம் தேவைப்படுகிறது. இதையும் பயிரிடப்படுவதற்கு முன்பு நிலத்தில் அடியுரமாக இட வேண்டும்.
மட்கு உரத்தின் வரை முறைகள்
மட்கு உரம் தயாரிக்கும் போது, பொருட்கள் முற்றிலும் மக்கி இருக்க வேண்டும்.
கழிவுகள், சரியாக மக்கவில்லை என்றால் அதை4 மி.மி சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும். சலித்த பின்பு கிடைக்கும் கழிவுகளை மீண்டும் மக்கச் செய்ய வேண்டும்.
மட்குஉரம் தயரித்தலில் வெட்டப்பட்ட பெரிய கிளைகள் மற்றும் மற்ற மரபொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது. இது மக்க அதிக நாள் எடுப்பதுடன் மற்ற பொருட்கள் மக்குவதிலும் தடை ஏற்படுத்துகின்றது.