கோழி மற்றும் மீனை ஒருங்கிணைந்த பண்ணையில் எப்படி வளர்ப்பது?

First Published Mar 20, 2018, 1:33 PM IST
Highlights
How to grow chicken and fish on a cozy farm?


கோழி - மீன் வளர்ப்பு

கோழியின் கழிவில் மிகுந்துள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மீன்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். கோழிக் கொட்டகையை குளத்தின் மீது மூங்கில் கம்பங்களைக் கொண்டு அமைத்தால், கோழிகளின் கழிவுகள் நேரே குளத்தினுள் விழுந்து மட்கி மீன்களுக்கு இரையாகும். இம்முறையில் 4500 - 5000 கி.கி மீன்கள் கிடைக்கும்.

தரமான கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான முறையில் கோழிப்பண்ணை அமைத்து தீவனமளித்துப் பராமரித்தால் இம்முறை மிகவும் இலாபகரமானதாக அமையும். தீவிர வளர்ப்பு முறையில் கோழிகளை வளர்த்தல் வேண்டும். இதற்கு ஆழ்கூள முறை சிறந்தது. 

உலர்ந்த இலைகள் மரத்துகள்கள், நிலக்கடலையின் தொழிகள் சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் போன்றவற்றை அடர்த்தியாகப் போட்டு ஆழ்கூளம் தயார் செய்யப்படுகிறது.

இம்முறை வளர்ப்பிற்கு லெக்ஹார்ன் (அ) ரோட் ஐலேண்ட் போன்ற இனங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டர் பரப்பளவில் 2500 கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாம். மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். 

முட்டையிடும் கோழிகளாக இருப்பின் 0 - 8 வாரங்கள் வரை குஞ்சுத்தீனி அளிக்க வேண்டும். பின்பு 8 - 20 வாரங்கள் வரை வளரும் கோழிகளுக்கேற்ற தீனியும் 20 வாரங்களுக்கு மேல் முழுமையான தீவனமும் அளிக்க வேண்டும்.

இதுவே இறைச்சிக் கோழியாக இருப்பின் 4 வாரங்கள் வரை குஞ்சுத்தீவனமும் பின்பு 6 வது வாரம் வரை முழுத்தீவனமும் கொடுத்தால் போதுமானது. கோழிக் கொட்டகையின் ஆழ்கூளத்தை நாளொன்றுக்கு 30 - 35 கி.கி என்ற வீதம் குளத்தில் விழச் செய்யப்படுகிறது. 

ஒரு வளர்ச்சியடைந்த கோழியானது ஓராண்டிற்கு 25 கி.கி வரை மட்கிய கழிவை வெளியேற்றுகிறது. ஒரு ஹெக்டர் குளத்திற்கு 1000 பறவைகளின் கழிவு போதுமானது. இம்முறையின் மூலம் ஆண்டிற்கு 3000 - 4000 கி.கி மீன்களைப் பெறலாம். 9000 -10000 கோழி முட்டைகளையும் 2500 கி.கி இறைச்சியையும் பெற முடியும்.

திலேப்பிக்கெண்டை, சாதாரண கெண்டை, விரால் போன்ற மீன் குஞ்சுகளை 20000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வளர்க்கலாம். அதனுடன் 4000 கோழிக்குஞ்சுகள் / ஹெக்டர் என்ற அளவில் வளர்க்க முடியும். 

எந்த ஒரு செயற்கை உரமும் இடத் தேவையில்லை அல்லது 5000 பெரிய நன்னீர் இறால் குஞ்சுகளையும் (மேக்ரோபியம் ரோசன்பெர்ஜி) மற்றும் 1500 வெள்ளி கெண்டை மீன்களை சேர்த்து 1 ஹெக்டர் குளத்தில் வளர்த்தால் 4 மாதங்களில் 600 கி.கி இறால் மீன்களை அறுவடை செய்யலாம்.

click me!