பயிரிட்ட நிலக்கடலையில் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

 |  First Published Sep 27, 2017, 1:02 PM IST
How to control disease in groundnut



** இரவு வேளையில் நிலக்கடலை வயலுக்கு அருகில் பல இடங்களில், விளக்கு பொறி வைத்தால், தீ வெளிச்சத்தில் கவரப்பட்ட பூச்சிகள் ,அதன் அருகில் வைத்தால்ஆமணக்கு கலந்த நீரை வைத்தால் அதில் பூச்சிகள் விழும் .

** சுண்ணாம்பு கரைசலைத் தெளிப்பதால், இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

Latest Videos

undefined

** வயலின் வரப்பு  ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்ப்பதால், அது சிவப்பு கம்பளிப்புழு அதிகமாக கவரும் செடியாகிவிடும்.

** தண்ணீரை தெளிப்பதால் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்தலாம்.

** புகையிலை பயிரில் வெட்டுப்புழுவின் தாக்குதலைக் குறைக்க ஆமணக்கு செடியை வரப்பு பயிராக பயிரிடவேண்டும்.

** கோடை உழவு செய்வதால், மண்ணின் அடியில் இருக்கும் சிவப்பு கம்பளிப்புழுவின் கூட்டுப்புழுவை அழிக்கமுடியும்.

** 10 கிலோ சோற்றுக் கற்றாழையை நன்றாக அரைத்து அதே அளவு தண்ணீரில் கலந்து தெளிப்பதால் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

** நிலக்கடலையில் வட்ட ‘மொசைக்’ நோயைக் கட்டுப்படுத்த காய்ந்த சோளம் / தென்னை ஓலையை தூளாக்கி தண்ணீரில் ஒரு மணி நேரம் கொதிக்க வைத்துப்பின் வடிகட்டி அதில் நீர் கலந்து விதைத்த 10 ஆம் நாள்  20 நாள் என இருதடவைத் தெளிப்பது நல்லது.

** இரண்டாவது அல்லது மூன்றாவது நீர்ப்பாசனம் செய்யும்போது பாசன நீருடன் வேப்பஎண்ணெயை கலந்து விடுவதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும்.

** ஏக்கருக்கு 6லி வேப்ப எண்ணெய் தெளிப்பதால் வேர் அழுகல் நோய் கட்டுப்படும். 4 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் அல்லது 6 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் துரு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

** நிலக்கடலையோடு தட்டைப்பயிர் / பச்சைவகை யை ஊடுப்பயிராக பயிரிட்டால், சிவப்பு கம்பளி புழுவை கவரும் செடியாக தட்டைப்பயிறு இருக்கும்

click me!