முயல்களுக்கான இனப்பெருக்கத்தில் கருமுட்டை வெளிப்படுதல்
** முயல்களில் கருமுட்டை வெளிப்படுவது தன்னிச்சையாக நடப்பதில்லை. இவைகளில் ஓஸ்டிரஸ் சுழற்சி காணப்படுவதில்லை. எனவே இனச்சேர்க்கை மூலம் கருமுட்டை வெளிவருமாறு தூண்டப்படுகிறது.
** இனச்சேர்க்கைத் தூண்டலானது இனக்கலப்பினாலோ, வெளிப்புறத் தூண்டலினாலோ, இனப்பெருக்க அணு உற்பத்தித் தூண்டுதல் மூலமாகவோ, கருமுட்டை வெளிவருதல் மூலமாகவோ நடைபெறுகிறது.
** சில முறை பெண் முயல்களே ஒன்றையொன்று தூண்டிக் கொள்வதும் உண்டு. இதனால் பொய்ச்சினை மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
** இனச்சேர்க்கை செய்த 10 மணி நேரம் கழித்துதான் கருமுட்டை வெளிவரும். ஆண்டு முழுவதும் முயல்கள் இனச்சேர்க்கைக் கொண்டாலும், சுரப்பிகள் விரிந்து பின்பு பின்னோக்கிச் செல்லும் சுழற்சியின் 15-16 நாட்களில் தான் அவற்றின் கருமுட்டை வெளிப்படுவது அதிகமாக இருக்கும்.
** பிற நாட்களில் பெண் முயல்கள் இனச்சேர்க்கையை விரும்பவதில்லை. சினைப்பையை இயந்திரம் மூலம் தூண்டி விடுவதன் மூலமாகவும் கரு முட்டை வெளிவருவதைத் துரிதப்படுத்தலாம்.
முயல்களுக்கான இனச்சேர்க்கை
** சூட்டில் இருக்கும் முயல்களைக் கண்டுபிடிப்பது கடினம். எனினும் சில சமயங்களில் அமைதியின்மை, நடுக்கம், வாயை அடிக்கடி தேய்த்தல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
** பெண் உறுப்பு தடித்து, கருஞ்சிவப்பு நிறத்தில் ஈரமாக இருக்கும். சரியான பருவத்தில் உள்ள பெண் முயல் வாலைத்தூக்கி ஆண்முயலின் இனச்சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும்.
** இனக்கலப்பிற்கான பெண் முயலின் வயது 5-6 மாதங்கள் அதிகாலை, அந்திமாலை நேரங்கள் இனக்கலப்பிற்கு மிகவும் ஏற்றவை. பொதுவாக பெண் முயல்களை ஆண் முயலின் கூண்டிற்கு எடுத்துச் சென்று கலப்பிற்கு விடவேண்டும். புது இடங்களில் ஆண் முயலானது சரியாக இனச்சேர்க்கை செய்யாது.
** இனச்சேர்க்கை நடந்தவுடன் ஓரிரு நிமிடத்தில் ஆண் முயல் கிரீச் என்ற சப்தத்துடன் ஒரு புறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். இதுவே சரியான இனச்சேர்க்கை ஆகும். சரியாக இனச்சேர்க்கை நடக்காவிடில் பெண் முயல்களை இனச்சேர்க்கை முடியும் வரை 3-4 நாட்களில் ஆண் முயல் கூண்டுக்குள்ளேயே விட்டு வைக்கவேண்டும்.
** நல்ல இலாபம் ஈட்ட ஒரு முயலானது 5 முறை ஆண்டொன்றிற்கு குட்டிகள் ஈனவேண்டும். அதற்குக் குட்டிகளை 6 வார வயதில் தாயிடமிருந்து பிரித்துவிட்டு உடனே பெண் முயலை அடுத்த இனச்சேர்க்கைக்கு விடவேண்டும்.
** ஒவ்வொரு இனப்பெருக்க காலமும் 65-75 நாட்கள், இதற்கு குட்டி ஈன்ற 21வது நாளில் அடுத்த கலப்புச் செய்வதால் ஈற்றுக்களை அதிகப்படுத்தலாம்.