நல்ல, ஆரோக்கியமான முயல்களிடமிருந்து தான் வளமான குட்டிகளைப் பெற முடியும். ஆகவே சிறந்த இனங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.
ஆண் முயல்களை தேர்வு செய்யும் முறை
undefined
** இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தம் ஆண் முயலுக்கு குறைந்தது 8 மாத வயதாவது இருக்கவேண்டும்.
** நல்ல கிடா முயலானது 3 வருடங்கள் வலை நல்ல இனவிருத்தித் திறன் பெற்றிருக்கவேண்டும்.
** இளம் கிடாக்கள் 3 (அ) நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு ஒரு பெட்டை முயலுடன் சேர்க்கலாம்.
** 12 மாத வயதிற்குப் பிறகு வாரத்திற்கு 4-6 பெட்டைகளுடன் சேர்க்கலாம். 6 வருடத்திற்குப் பின்பு அதன் விந்தணு உற்பத்தி மிகவும் குறைந்து விடும். ஆதலால் அதைப் பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும்.
** கிடாக்களின் இனவிருத்தித் திறன் குறையாமல் இருக்க நல்ல உணவூட்டமும், பராமரிப்பும் அவசியம். புரதம், தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த உணவளித்தல் அவசியம்.
** அதோடு கிடாக்களைத் தனித்தனியே பராமரித்தால் அவை சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கலாம்.
பெண் முயல்களை தேர்வு செய்யும் முறை
** இனவிருத்திக்குப் பயன்படுத்தும் பெண் முயல் பெட்டை முயல் எனப்படும். இது அதிக ஆரோக்கியமும் இனவிருத்தித்திறனும் பெற்றிருத்தல் அவசியம்.
** பெட்டை முயலானது தட்பவெப்பநிலை, இனம் மற்றும் உணவூட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்தே அதன் இனப்பெருக்கத்திறன் அமையும்.
** பெரிய இனங்களை விடச் சிறிய இனங்கள் விரைவிலேயே பருவமடைந்து விடுகின்றன. சிறிய இனங்கள் 3-4 மாதங்களிலும், எடை மிகுந்த இனங்கள் 8-9 மாதங்களிலும் பருவமடைகின்றன.
** 3 வருடங்கள் வரை மட்டுமே பெண் முயல்களை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்.