அம்மை நோயில் இருந்து கோழிகளை காக்க கையாள வேண்டிய முறைகள் இதோ...

 
Published : Mar 16, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
அம்மை நோயில் இருந்து கோழிகளை காக்க கையாள வேண்டிய முறைகள் இதோ...

சுருக்கம்

Here are the methods to handle chickens from pox disease ...

அம்மை நோயில் இருந்து கோழிகளை காக்க கையாள வேண்டிய முறைகள் 

கோழி அம்மை நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண்கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது.

பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில்வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டுகட்டுபடுத்தலாம். 

** 7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில்மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்

** 14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்

** 3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாகஉபயோகிக்க வேண்டும்

** 5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசிஇறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்

** 8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்குஅடியில் மில்லி செலுத்த வேண்டும்

** 18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்

** மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும்.லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .

** தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன்மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!