குஞ்சு பொரிப்பகம் பயன்படுத்தியும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இது இலகுவானது.
கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக்குஞ்சு பொரிக்க முடியும்.
குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம்முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும்.
இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்றுஅடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறுபாதுகாக்க வேண்டும். அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முடவேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.
இவ்வாறு பாதுகாத்துவைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில்முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம்முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும்பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .