‘ராம் கங்கா’ ரகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, 200 கன்றுகளை வாங்கி நடவு செய்தென். இது மூன்று வருடத்தில் காய்ப்பிற்கு வரும் ரகம். இதில் வருடத்திற்கு சராசரியாக 300 தேங்காய் கிடைக்கிறது.
கொப்பரை உற்பத்தி, இளநீர் தேவை இரண்டிற்கும், ஏற்ற ரகம். பொதுவாக இளநீரை வெட்டும் போது, ஒரு மரத்திலிருந்து … 200 காய்கள்தான் கிடைக்கும். ஆனால், ராம் கங்கா ரகத்தில் 400 காய்கள் வரைக்கும் கிடைக்கும். அதுதான் இந்த ரகத்தோட சிறப்பம்சம்.
இந்த ரகத்தை உருவாக்கினது நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த உமாபதி என்ற விவசாயிதான்.
தென்னை பராமரிப்பு விஷயங்கள்
இந்த ரகத்தில் ஒரு மரத்திற்கு தினமும் 150 லிட்டர் தண்ணீர் கொடுத்தாக வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு தடவை 5 கிலோ கோழி எருவையும், 5 கிலோ தொழுவுரத்தையும் கொடுக்க வேண்டும். யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மூன்றையும் கலந்து வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.
ஊசி வண்டு, காண்டாமிருக வண்டுகளை இனக்கவர்ச்சிப் பொறி மூலமாக கட்டுப்படுத்த வேண்டும்.25 நாளுக்கு ஒரு முறை இளநி வெட்டுகிறேன். ஒரு இளநி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரைக்கும் விலை போகும்.
தென்னை விவசாயிகள், மொத்ததையும் முற்ற விட்டு தேங்காயாக விற்காமல், 25 சதவிகித அளவுக்கு இளநீராக வித்தா நல்ல லாபம் பார்க்க முடியும்.
ராம்கங்கா ரகத்தை உருவாக்கிய உமாபதி, பல்லடம் அடுத்துள்ள நாவிதன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் இருக்கும் ‘கங்கா பாண்டம்’ என்கிற குட்டை ரகம், அதிக மகசூலைக் கொடுக்கக் கூடியது.
அந்த ரகத்தோடு கேரள மாநிலத்தின் மேற்கு கடற்கரைப் பகுதி நெட்டை ரக தென்னையை இணைத்து, நான் உருவாக்கியதுதான், ராம் கங்கா, இது மூன்று ஆண்டுகளில் காய்ப்பிற்கு வருவதுடன் அதிகளவு சுவையான தண்ணீர் உள்ள இளநியைக் கொடுக்கும்.
முற்றிய தேங்காயில் அதிக கொப்பரையும் கிடைக்கும் (100 தேங்காய்க்கு 18 கிலோ கொப்பரை). உரித்த தேங்காயின் எடை 600 கிராம் அளவில் இருக்கும். 27 அடி இடைவெளியில் மூன்று கன் அடி அளவிற்குக் குழியெடுத்து அதில் தொழுவுரம் – 5 கிலோ, தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை இட்டு ஒன்றரையடி ஆழத்தை நிரப்பி, நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இப்படி நடவு செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் 63 நாற்றுகளை நடலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்வது நல்லது. இது உப்புத் தண்ணீரிலும் வளரக்கூடிய ரகம். அதே சமயம், அதிக தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே இதைப் பயிரிட முடியும்.
மத்திய தென்னை ஆராய்ச்சி நிலையம் இந்த ரகத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒரு நாற்றை உற்பத்தி செய்ய இரண்டு ஆண்டுகள் ஆகும். ஒரு நாற்றை 250 ரூபாய் விலைக்கு விற்பனை செய்கிறேன். இந்த ரகத்தை நடவு செய்த விவசாயிகள் அனைவரும் நல்ல மகசூல் எடுக்கலாம்.