வேளாண் காலநிலைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பண்ணையமானது நடைமுறைப்படுத்தப் படுகிறது. அதாவது மழை, மண் வகைகள் மற்றும் விற்பனைத் தேவை போன்ற இயற்கை ஆதாரங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வேளாண் சூழலியல் மற்றும் பயிர்முறை போன்றவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள வேளாண் காலநிலை மண்டலத்திற்கு பண்ணையம் மாறுகிறது.
1. மேற்கு மண்டலம்
* நன்செய்
பயிர் + மீன் பண்ணை + கோழிப்பண்ணை + காளாண் வளர்ப்பு
* இறவைப்பகுதி
உயிரி வாயு உற்பத்தி + காளாண் + பால் கறக்கும் கால்நடை
* மானாவாரிப் பகுதி
பயிர் உற்பத்தி + தீவனப்பயிர் + மரங்கள்
2. வட மேற்கு மண்டலம்
சாகுபடிபயிர் + பால் கறக்கும் பசுக்கள் + கோழிப்பண்ணை (6 அடுக்குகள்)
3. மலைப்பிரதேசம்
சாகுபடிபயிர் + பால் கறக்கும் பசுக்கள் + கோழிப்பண்ணை (6 அடுக்குகள்) + இறைச்சிக் கோழிகள்
4. காவேரி டெல்டா மண்டலம்
நெற் பயிர் + பால் கறக்கும் பசுக்கள்
நெற் பயிர் + வாத்து வளர்ப்பு + மீன் வளர்ப்பு
நெற் பயிர் + ஆடு வளர்ப்பு
5. தெற்கு மண்டலம்
நெல் சார்ந்த பயிர் + மீன் வளர்ப்பு + கோழிப்பண்ணை