1.. முயல்களின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றை அடர் தீவனம் மட்டும் கொண்டு வளர்க்க முடியாது,
2.. முயல்களுக்கு சரியான நேரத்தில் தீவனம் கொடுக்க வேண்டும். நேரம் தவறினால் முயல்கள் பரபரப்படைந்து உடல் எடை குறையும்.
undefined
3.. முயல்கள் பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை காரணமாக தீவனம் சாப்பிடாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். இரவு நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே பசுந்தீவனங்களை இரவு நேரங்களில் தீவனம் அளிப்பது முயல்கள் அவற்றை வீணாக்காமல் சாப்பிடுவதற்கு ஏதுவாகும். முயல்களின் இந்த பழக்கத்தால் அடர் தீவனத்தினை காலை நேரங்களில் அளிக்கலாம்.
4.. அடர் தீவனத்தினை குச்சி தீவனமாக அளிக்கலாம். குச்சி தீவனம் கிடைக்காத இடங்களில் தூள் தீவனத்தினை தண்ணீரில் பிசைந்து சிறிய உருண்டைகளாக கொடுக்கலாம்.
5.. ஒரு கிலோ எடையுள்ள முயலுக்கு நாள் ஒன்றுககு 40 கிராம் அடர் தீவனமும் 40 கிராம் பசுந்தீவனமும் கொடுக்கவேண்டும்.
6.. முயல்களுக்கு பசுந்தழைகளை புதிதாக அளிக்க வேண்டும். வாடிய தழைகளை முயல்கள் விரும்பி உண்ணாது. தரையில் பசுந்தழைகளை போடாமல் பக்க வாட்டில் சொருகி வைப்பது முயல்கள் அவற்றை நன்கு சாப்பிடும்
7.. சுத்தமான சுகாதாரமான குடிநீர் முயல்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.