''தமிழ்நாட்டைப் பொருத்தவரை மழை பெய்யும் நாட்கள் குறைவு. ஓர் ஆண்டுக்குத் தேவையான ஒட்டுமொத்த மழையும், சில நாட்களில் கொட்டி தீர்த்துவிடும்.
ஆனால், பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டிருந்தால், துளி மழை நீர்கூட வீணாகாமல் சேமித்து வைக்க முடியும். இதன் காரணமாக பண்ணையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இவ்வளவு பயன்கள் இருப்பதால்தான், தமிழக அரசு பண்ணைக் குட்டைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
100 அடி நீளம், 100 அடி அகலம் மற்றும் 5 அடி ஆழம் என்ற அளவில் பண்ணைக் குட்டை அமைக்கப்பட வேண்டும். இதற்கு, அரசாங்கம் 100 சதவிகிதம் மானியம் அளிக்கிறது.
இந்த திட்டம் தமிழகம் முழுவதும் கிடைக்கபெறும் அருமையான திட்டம். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.