பசுமாட்டுசாணம் 10 கிலோ,கோமியம் 10 லிட்டர்,வெல்லம் 2 கிலோ அல்லது 4-5 லிட்டர் கரும்பு சாறு,உளுந்து,துவரை,தட்டை பயிறு போன்ற சிறுதானியங்களின் மாவு 2 கிலோ,200 லிட்டர் தண்ணீர் இதனுடன் உங்கள் நிலத்தின் (ஜீவனுள்ள) மண் ஒரு கைப்பிடி இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் கேன் அல்லது டிரம் அல்லது பானையில் வைத்துவிடுங்கள், இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை கடிகார சுற்றுபடி கலக்கி விட வேண்டும் (எதிர் திசையில் சுற்றினால் நுன்னுயிர்கள் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்).
இந்த கேனை கண்டிப்பாக நிழலான இடமாக பார்த்து வைக்க வேண்டும்.ஜீவாமிர்தம் 48 மணி நேரத்தில் தயாராகிவிடும்.
இது ஒரு ஏக்கர்க்கான அளவு. இதனை பாசன நீரிலும் கலந்து விடலாம்,தெளிப்பான் கொண்டும் தெளித்து விடலாம்.
இதை நெல்,கம்பு,சோளம்,காய்கறி செடிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.இதனால் சுவை மற்றும் விளைச்சல் அதிகமாகும்.