1.தாழ்வான பகுதியிலுள்ள வயல்வெளிகளில் இயற்கை வேளாண்மை செய்வதென்றால் அவ்வயல்களைச் சுற்றி கரைகளை உயர்த்தி அமைக்கவேண்டும். அப்பொழுதுதான் மழைக்காலங்களில் மற்ற வயல்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மழைநீரில் வருவது தடுக்கப்படவேண்டும்.
2.இயற்கை விவசாயத்திற்கு இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தும் முன்னர் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணின் மலட்டுத்தன்மை முதலில் சரியாகும்.
3. விதைகளில் முற்காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரகங்களையே பயன்படுத்துதல் நல்லது.
4. அதிக பொருட்செலவில் இடுபொருள்களை இட்டு அதிக மகசூல் என்பதைவிட குறைந்த செலவில் ஆரோக்கியமான இடுபொருட்கள் இட்டு சராசரியான மகசூல் என்ற இலாப நோக்கத்தை பின்பற்றவேண்டும்.
5.தண்ணீர் மற்றும் மின்பற்றாக்குறை சிரமங்களை கருத்தில்கொண்டு தெளிப்பு நீர், சொட்டுநீர் மற்றும் மரங்களுக்கு பானையில் திரியிடும் முறை போன்றவற்றை பயன்படுத்தலாம்.
6. களைகளை நீக்க மூடாக்கு முறைகளை பயன்படுத்தலாம்.
7.இயற்கைமுறைகளில் பூச்சிக்கொல்லிகள் அல்லது பூச்சிவிரட்டிகளை நாமே தயாரித்தல் வேண்டும்.
8.உப தொழிலாக விவசாயத்தின் உற்ற நண்பர்களான கால்நடைகள் வளர்க்கவேண்டும். அதிலும் நாட்டு ரகங்களை தேர்வு செய்தல் மிகவும் நல்லது.
9. பயிர்சுழற்ச்சி முறைகள் மற்றும் காலத்திற்கேற்ப பயிர்களை தேர்வு செய்தல் வேண்டும்.
10.பசுந்தாள் உரங்களை பூக்கள் வரும் முன் மடக்கி உழவு செய்து பயன்படுத்தவேண்டும்.