அக்னி அஸ்திரம்:
புகையிலை ½ கிலோ,பச்சை மிளகாய் ½ கிலோ,பூண்டு ½ கிலோ, வேப்ப இலை 5 கிலோ ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை 15லிட்டர் மாட்டு சிறுநீரில்(கோமியம்) நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை 4 முறை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டினால் அக்னி அஸ்திரம் தயார்.
காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம்.