பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது என்ன செய்யணும்? என்ன செய்யக் கூடாது? தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Jul 13, 2017, 12:41 PM IST
dos and donts when using pesticides



செய்ய வேண்டியவை

1. பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும்

Tap to resize

Latest Videos

2. பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்

3. பொதுவாக வெயில் அடிக்கும் நாட்களில் பூச்சிக்கொல்லி அடிக்க வேண்டும்

4. பரிந்துரைக்கப்பட்ட தெளிப்பானை தனித்தனியே ஒவ்வொரு கரைசலுக்கும் உபயோகிக்கவேண்டும்

5. காற்றடிக்கும் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும்

6. பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை சோப்பு கொண்டு சுத்தமான நீரினால் கழுவவும்

7. பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தவுடன் இதர வேலையாட்கள் மற்றும் விலங்குகளை வயலுக்குள் அனுமதிக்கக்கூடாது

செய்யக் கூடாதவை

1. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது

2. பூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது

3. மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது

4. பேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது

5. காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கக்கூடாது

6. பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்த பின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது

7. பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த வயலுக்குள் செல்லக்கூடாது

click me!